Word Muse #6 – அய்யனாரின் நிலைமை

For what are ‘Word Muses’ and the list till now, look here.

Request : Please forgive spelling mistakes if any. I am largely out of touch with the written form of any language except English and Mathematics! Free spell-checks and corrections hugely appreciated [sheepish grin].

கண்கள் பூத்து காவல் காத்து
கால் கடுக்க காலம் காலமாய் நின்றும்
ஊருக்குள் அனுமதி இல்லை,
ஒரு கவளை மோர் கொடுக்க ஆள் இல்லை.
அரங்கத்தானுக்கு மட்டும் குளு குளு கோவில்
தினம் பள்ளி எழுச்சி, எண்ணைக் குளியல்
புதுப் பட்டு, புளியோதரை
பாவி, அவன் மட்டும் குடிப்பவனாய் இருந்தால்
படுக்கையிலேயே கொடுப்பார்கள் – கும்பகோணம் டிகிரி காபி.

 

“என்ன அய்யனாரே.. ஏதோ எரியும் வாடை வருகிரது?” கணீர் குறல் கேட்டு கீழ் இறங்கி வந்தது original கருடரே.
“வா கருடா.. உங்கள் தலைவரைச் சொன்னால் உடனே வந்துவிடுவாயே!”
“இருக்காதா? என்ன? புதுக்கவிதை எல்லாம் தூக்குது?”
“அடப் போய்யா”
“என்னய்யா சலிப்பு? ஸ்ரீ ரங்கத்தான் பெரிய வீட்டு கடவுள். மேல் ஜாதி. நீ ஏழை வீட்டு.. ஊம்ஹூம்.. காட்டு தெய்வம். கீழ் ஜாதி. பணமும் ஜாதியும் வித்தியாசம் பாக்க்குமா? அதுங்களுக்கு மனுஷனும் தெய்வமும் ஒன்னு தானய்யா! தெரிஞ்சதுதானே?”
“போ கருடா.. ஆதரவில்லாம வெய்யில்ல அனாதை சிலையா நிக்கிறேன். வர வர கமல ஹாசன் சொன்னாப்ல நாட்ட விட்டே போய்டலாமானு தோனுது.”
“ஆ.. over-ஆ சொல்லாத பா!”
“நெஜமா பா.. நேத்து இப்படி தான் tourist bus ஒன்னு இந்த பக்கமா வந்துச்சு. ஒரு அற டவுசர் போட்ட சேட்டு பொன்னு வந்து என்ன போட்டோ எல்லாம் புடிச்சுச்சு.”
“ஐ.. நல்ல வெரப்பா போஸ் குடுத்தியா?”
“முழுவதும் கேளும் கருடரே.”
“நீர் மேலே சொல்லும் அய்யனாரே.”
“அது சரி, நாம ஏன் அப்பப்ப இப்படி ரொம்ப தமிழா தமிழ் பேசரோம்?”
“நாம புராண characters. இப்படி தான் பேசனும்னு தமிழக மக்கள் எதிர்பாக்கராங்க.”
“ஓ அப்படி. அப்பரம் பாத்துப்போம்.. அந்த பொன்னு அவங்க tour guide-அ கேக்குது கருடா.. ‘whose statue is this?’-னு.”
“ஹீ ஹீ.. அய்யனாரை கண்டு யார் யாரோ கேட்கிரார்கள், அய்யன் யார் என்று.”
“மொக்கை போடாதடா.. அந்த tour guide பய பொரம்போக்கு – சோம்பேரி, மொள்ளமாரி.. அவனும் அவன் தமிங்க்லீசும்.. திமிங்கலம் அவன தின்ன!”
“என்ன தான் சொன்னான்?”
“சொல்ரான்.. ‘famous politeesan. you see in hand? big knife – அருவாள். big moustaach மீசை. pold dhoti. you see? you see in tamil cinema? politeesan? this is politeesan. BIG politeesan. take pull poto. quyik. we go next spaat.”

 

கருடர் வந்து அய்யனார் தோள் மேல் அமர்ந்து, அவர் முகத்தை உற்று பார்க்க..
“என்ன? சிரிப்பு வருதா? சிரிச்சு தொல!”
“இல்ல.. அவன பழி வாங்கி இருப்பியே.. என்ன பன்ன?”
“விடுவேனா? நம் காக்கை நண்பர்கள் எல்லோரயும் வரிசையாய் அவன் பின்னால் அனுப்பினேன் – குறி தவராமல் அவன் மேல் எச்சம் இட. சில நிமிடங்களில் அவன் ஆகிவிட்டான் – கடற்கரை அண்ணா சிலை போல.”
“ஆமா.. இதுக்கு தூய தமிழ் வேர. சின்னப்புள்ளத் தனமா..”
“ஏதோ என்னால முடிஞ்சது.”

 

“சரி, ஒரு யோசனை சொல்ரேன் கேப்பியா?”
“வழக்கம் போல வெவகாரமா யோசனையா? சொல்லி தொல.”
“நீ நம்ம ஊரு அரசியல்வாதி கனவுல போய் பயமுருத்து – நல்ல மீசையெல்லாம் முருக்கி, கண்ண செவப்பா உருட்டி, cinema வில்லன் மாதிரி அருவாள ஆட்டி ஆட்டி சிரிச்சு வெக்காத – அவனுக்கு சிரிப்பு தான் வரும், தூக்கத்துல பொண்டாட்டிய தட்டி popcorn கேப்பான். ஒழுங்கா underplay பன்னி, sound-ஏ இல்லாம, tight close-up-ல மொறசு பாத்தே பயமுருத்து.”
“பயமுருத்தி?”
“parliament-ல போய் நம்ம தெருவோர தெய்வங்களுக்கு இட ஒதுக்கீடு கேக்கவை. கண்டதுக்கெல்லாம் கேக்கரானுங்க, இதுக்குந்தான் கேக்கட்டுமே.”
“கேட்டா?”
“கேட்டா கடவுளுக்கு அரசு பணம் குடுக்கும் – உன்ன மாதிரி அம்போனு நிக்கிர அய்யனார், அரசமரத்தடி பிள்ளயார்கு எல்லாம் maintenance, தலைக்கு மேல asbestos கூரை, இரண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி புது paint. இல்லனா பத்து இருவது வருஷத்துல எல்லாரும் ஒடஞ்சு பொடியா விழுந்துடுவீங்க.”
“ஹும்.. அரசியல்வாதிகள் – ஜாதியும் ஜனமும் போற்றி காக்கும் தெய்வ கலாச்சாரம் காக்க வந்த வெள்ளை வேட்டி தெய்வங்கள்”
“போதும் மொக்கை கவிதை.. அடங்கு”
“சரி.. நல்ல யோசனை பா. நான் பயமுருத்த practise பன்னரேன்.”
“அத பன்னு”
“அப்படியே இலவச அருவாள் திட்டம் உருவாக்க சொல்றேன்.”
“ஹும்.”
“கூடவே காவல் தெய்வங்களுக்கு இலவச computer course”
“அருவாள் சரி.. computer உமக்கு எதுக்கய்யா?”
“இந்த வாரம் நீயா-நானா பாக்கல நீ? பசங்க சொல்றாங்க பா.. laptop configuration தெரியாதவன் எல்லாம் அரசியல்வாதியா இருந்தா மதிக்க மாட்டாங்களாம். வெறும் அரசியல்வாதி அவனுக்கே தெரியனுமாம், நான் தெய்வம் ஆச்சே.. நம்ம மரியாதைய நாம தானே காப்பத்திக்கனும்? இப்போ எல்லாம் காவல் கூட computer-லதான் காக்கனுமாமே. காலத்துக்கு ஏத்த மாதிரி கடவுளும் மாறனும்ல! கோபி கூட கடசில அதான்பா சொன்னான்! French-beard வெக்கலாம்னு கூட பாக்கரேன்.. நீ என்ன சொல்ர?”
கருடர் “இது எனக்கு தேவையா? என் வேலை உண்டு, கழுக்குன்றம் உருண்டை உண்டுனு இருக்காம, இது எனக்கு தேவையா?” என்று நொந்துக்கொண்டே பறக்க, அய்யனார் வாய் நிறைய ஆசையாய் சிரித்துக்கொண்டே கண்டார் பகல் கனவு, digital color-இல்.
Advertisements